Friday, April 22, 2005
Troy: ட்ராய்
அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: மதி கந்தசாமி
சமாதானம் பேசப்போன மகன்களில் ஒருவன் போன இடத்தில், அந்த நாட்டு ராணியோடு திரும்புகிறான். அவனுடைய அண்ணன் விஷயம் தெரிந்ததும் அவளைத் திரும்பக் கொண்டுபோய் விட்டுவிடலாம் எனச் சொல்கிறான். தம்பி முடியவே முடியாதென்று கூற, இருவரும் நாடு திரும்புகிறார்கள். அதற்கிடையில் மனைவியைப் பறிகொடுத்த அரசன் தன் அண்ணனிடம் உதவி கேட்கவும் சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்த அவனுடைய அண்ணன் சுற்றுப்புற நேச நாட்டுப் படைகளைத் திரட்டி, அந்த சகோதரர்கள் நாட்டின்மீது படையெடுக்கிறான். இவர்களோடு, இவர்களின் வேண்டுகோளை ஏற்று, யாருடைய சொல்லுக்கும் கட்டுப்படாத ஒரு மாவீரனும் அவன் படைகளோடு தனிக்கப்பலில் சேர்ந்துகொள்கிறான். அதற்குமுன்பு, சகோதரர்கள் இருவரும், தம்பி அழைத்து வந்த பெண்ணோடு, நாட்டுக்குத் திரும்பி, அவர்களின் தந்தையைச் சந்திக்கிறார்கள். இளையமகன் செய்தது தவறென்றாலும், அவன் அப்பெண்ணை நேசிப்பதைத் தாம் உடனே உணர்ந்ததாக தந்தை மூத்தவனிடம் சொல்கிறார். கப்பல்கள் முற்றுகையிடுவதை அறிந்துகொண்ட எதிராளிகள் போருக்கு ஆயத்தமாகிறார்கள்.
கடலுக்கு அருகே இருந்தாலும், அங்கிருந்து வெகுதூரத்திலேயே எதிரிகள் சுலபத்தில் துளைக்கமுடியாதபடி கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. கடற்கரையில் அவர்கள் வணங்கும் தெய்வங்களுக்கு பிரமாண்டமான கோயில் உருவாக்கப்பட்டிருந்தது. ஏகப்பட்ட பொன்னும் அந்த ஆலயத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அரசரின் மருமகளும் கோவிலில் பணிபுரிந்துவந்தாள். கூடவே காவலுக்குச் சில வீரர்கள்.
ஆயிரம் கப்பல்கள் விரைந்துவர, முதன்முதலில் கரையேறியது அந்த யார் சொல்லுக்கும் கட்டுப்படாத வீரனும் படையும். மிக லாவகமாகப் போர் புரிந்து ஆலயத்தை தம்வசமாக்கி முடிக்கவும், மூத்த சகோதரன் படையுடன் வந்து சண்டையிட்டுத் தோற்பதற்கும் சரியாக இருந்தது. அடுத்த நாள் போரில் சந்திக்கலாம் என்று மாவீரனால் திருப்பி அனுப்பப்படுகிறான்.
மீதிக்கப்பல்களும் வந்து சேர்ந்து, சில பிரச்சினைகள் எதிர்பாராத வண்ணம் எழுந்து அம்மாவீரன் போரில் ஈடுபட மறுக்கிறான். அடுத்த நாள் போரிற்குச் செல்லும் படைகளையும், கோட்டையைக் காத்து நிற்கும் எதிரிகளையும் தூரத்தில் இருந்துபார்க்கிறான். படையினர் போரிடுவதற்கு முன்பு மனைவியைத் தொலைத்தவனும், இளைய சகோதரனும் நேருக்கு நேர் மோதுகின்றனர். எதிர்பாராத வண்ணம் கணவன் இறக்கிறான். அதே நேரம் இளையவனின் கோழைத்தன்மையும் உலகிற்குத் தெரியவருகிறது. படைகள் மோதுகின்றன. உள்நாட்டுப் படைகள் வந்தவர்களைக் கொன்று குவித்தபடி இருந்தனர். கடற்கரைக்குத் திரும்பியவர்களை இரவில் வந்து தாக்குகிறது உள்நாட்டுப் படைகள். மூத்தவன், மாவீரன் என்று நினைத்து ஒருவனைக் கொன்றுவிடுகிறான். உறவினன் கொல்லப்பட்ட வேதனையைத் தாங்க இயலாத மாவீரன், கோட்டைக்குச் சென்று, மூத்தவனைத் தனியே சண்டைக்கு அழைக்கிறான். என்ன நடக்கிறது? உள் நாட்டவர் வெல்கிறார்களா? இல்லை ‘வந்தார்கள்… வென்றார்கள்…’ என்று ஆகப்போகிறதா? என்பதைப் படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
அதற்குமுன், சமாதானம் பேசப்போன சகோதரர்கள், இளையவன் அந்நாட்டு ராணிமேல் மையல் கொள்வது, அவளுக்காக ஆயிரம் கப்பல்கள் போருக்கு விரைவது, பெரும்போர் நடப்பது - இதையெல்லாம் எங்கேயோ கேட்டமாதிரி இல்லை?
சமாதானம் பேசப்போவது டுரோஜான் நாட்டு இளவரசர்கள் ஹெக்டரும்(எரிக் பானா - The Hulk), பாரிஸ¤ம்(Orlando Bloom - LOTR, Pirates of the Carribian). பாரீஸ் அவனுடன் அழைத்து வருவது ஹெலன். ஆமாம்! “The face that launched thousand ships” என்று சொல்லப்படும் ஹெலன் ஆ·ப் டுரோய் தான். யாருக்கும் அஞ்சாத மாவீரனாக ஆச்சிலஸ்(பிராட் பிட்). டுரோஜான் நாட்டு மன்னன் ப்ரியம்’ஆக கம்பீரமாக வருவது பீட்டர் ஓ’டூல் (லாரன்ஸ் ஆ·ப் அரேபியா, பெக்கெட்). இதுபோக மண்ணாசை பிடித்த மன்னன் Agamemnon. கூடவே, புத்திசாலித்தனம் கொண்ட கிரேக்கத்தைச் சேர்ந்த குறுநில மன்னனாக ஷோன் பீன்(LOTR - போரோமிர்).
மேலே சொன்ன கதாபாத்திரங்களின் பெயர்கள் ஹோமர் இயற்றிய இலியட்டை ஞாபகப்படுத்தி இருக்கும். பெயர்களையும், கதைக்காக மேலாக கொஞ்சம் இலியட்டைத் தொட்டதைத் தவிர ஹோமர் இயற்றிய இலியட்டிற்கும் இப்படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பத்து வருடங்களாக டுரோஜன் கோட்டையைத் தாக்கிக்கொண்டிருக்கும் அகெமெம்நோன்’இன் படைகள், வெறும் பத்து நாட்களோ அதற்குக் கொஞ்சம் கூடவோ குறையவோ தாக்கிக்கொண்டிருப்பதாகப் படத்தில் சித்தரிக்கிறார்கள். இரண்டரை மணி நேரம் ஓடும்படத்தில் வரலாற்றில் குறிப்பிடப்படாத பல விஷயங்களைச் சித்தரித்திருக்கிறார்கள், சில வரலாற்று நிகழ்வுகளைத் தம் இஷ்டத்துக்கு வளைத்திருக்கிறார்கள்.
ஆயினும் சில விஷயங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. டுரோஜான் அரசனாக வரும் குரலில் இன்னமும் கம்பீரத்தைத் தேக்கி வைத்திருக்கும் பீட்டர் ஓ’டூல். ஹெக்டராக நடித்து, நம் கவத்தைக் கவரும் எரிக் பானா. ஆச்சிலஸ் மற்றும் அவனுடைய படைகள் சண்டைபோடும் காட்சிகள்.
ஆயாசம் கொடுக்கும் விஷயங்களில் முக்கியமானது, கணினியில் உருவாக்கப்படும் சண்டைக்காட்சிகளும் சில நூறு நடிகர்களைப் பல்லாயிரக்காணக்கானவர்கள்போலக் காண்பிப்பதும். LOTR மூன்று பாகங்களில் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போயிருக்கிறார்கள் மக்கள் (குறைந்த பட்சம் நான்). கிளாடியேட்டர், LOTR படங்களைத் தொடர்ந்து பழங்காலத்துப் படங்களாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் ஆந்தோனி ·பாக்குவா’வின் படம் ஒன்றும் களமிறங்குகிறது.
படத்தில் பெரிதும் ஒன்ற முடியாமைக்கு இன்னொரு காரணம் பிராட் பிட். பாத்திரத்தின் முழுவீச்சையும் வெளிக்கொணர பிராட் பிட்டால் முடியவில்லை/முயலவில்லை. விட்டேத்தியாக, ஏனோ தானோ என்று இருப்பதுபோல சில நேரங்களில் தோன்றுகிறார். இயக்குநர் நடிக்கச் சொன்னவிதமா, அல்லது பிராட் பிட்டின் குணம் தெரிகிறதா என்று தெரியவில்லை.
கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி என்று சொல்லத் தோன்றுகிறது. இங்கே மயில் - கிளாடியேட்டர