Friday, April 22, 2005

The day after tomorrow: நாளை மறுநாள்

அசல் வலைப்பதிவுக்குச் செல்ல: மதி கந்தசாமி

ஞாயிற்றுக்கிழமை ஒரு படம் பார்த்தேன். ‘The Day after Tomorrow’

Dennis Quaid, Ian Holm, Jake Gyllenhaal, Emmy Rossum, Sala Ward ஆகியோர் நடித்திருக்கிறார்கள். Dennis Quaid பருவநிலைகளை ஆராயும் விஞ்ஞானி (Paleoclimatologist) Jack Hallஆக வருகிறார். அண்டார்டிக்காவில் சில பரிசோதனைகளை அவரும் சக விஞ்ஞானிகள் இருவரும் செய்வதோடு படம் தொடங்குகிறது.

கதை என்று பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. நியூடெல்லியில் நடக்கும் மாநாட்டில் Jack Hall பருவநிலை மாறுதல்களைப்பற்றியும், ஒவ்வொருத்தரும் கவனமாக
இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார். நம்முடைய வாழ்நாளில் அசம்பாவீதங்கள் நடக்கவில்லை என்றாலும், நம்முடைய சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லி, மாநாட்டுக்கு வந்திருந்த அமெரிக்க துணை ஜனாதிபதியுடன் வாக்குவாதப்படுகிறார். (துணை ஜனாதிபதி ஏனோ பார்ப்பத்ற்கு இப்போதைய துணை ஜனாதிபதி போலவே இருக்கிறார்.) மாநாட்டு வந்திருந்த அயர்லாந்து விஞ்ஞானி ஒருவருடன் உரையாடியபடி நீயூடெல்லியில் டாக்சி பிடித்துப்போகிறார். (ரொம்ப முக்கியம்’னு சொல்லுறது கேக்குது. என்ன செய்யறது கதை அப்படி இருக்கு. கூடவே நம்ம ஊர்னு வேற காமிக்கி
றாங்களா. அதான். :) )

நமது விஞ்ஞானியின் மகன் (Jake Gyllenhaal - Sam Hall) தனது டாக்டர் தாயாருடன் வாழ்கிறார். ஏதோ ஒரு குவிஸ் நிகழ்ச்சிக்காக நீயூயார்க்கிற்கு நண்பர்களுடன் பயணப்படுகிறார். இதற்கிடையில் உலகின் பல பாகங்களிலும் மாறுதல்கள் ஏற்படுகின்றன. The North Atlantic Drift சுமந்துவரும் நீர் வழமையை விட குளிர் அதிகமாக இருக்கிறது. டோக்கியோவில் ஆலங்கட்டி மழை பெய்கிறது. நீயூடெல்லியில் பனி பொழிகிறது. லாஸ் ஏஞ்சலஸில் டொர்னாடோ பயங்கர சேதம் உருவாக்குகிறது. நமது விஞ்ஞானி மேலிடத்தில் இருப்பவர்களை எச்சரிக்க முயன்று தோற்கிறார். அயர்லாந்தில்
இருக்கும் நீயூடெல்லி மாநாட்டில் சந்தித்த விஞ்ஞானிக்கு உத்வுகிறார்.

லாஸ் ஏஞ்சலஸில் பலத்த சேதம் ஆனபிறகு, மேலிடத்தில் இருப்பவர்கள் நமது விஞ்ஞானி சொல்வதைக் கேட்கிறார்கள். இத்ற்கிடையில் நிலைமை மோசமாகிறது. நீயூடெல்லி மாநாட்டில் வருடக்கணக்கில் நடைபெறும் என்று Jack Hall சொன்ன விஷயங்கள் சடசடவென நடக்கின்றன. Jack Hall, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என்று பூமத்திய ரேகைக்கு மேலே வடதுருவத்தின் அருகே இருக்கும் பிரதேசங்கள் பனிப்புயலினால் தாக்கப்படும் என்றும். மக்கள் நொடிப்பொழுதில் உறைந்து போவார்கள் என்றும் சொல்கிறார். அமெரிக்கர்கள் உயிர்பிழைக்க தெற்குநோக்கிச் செல்லவேண்டும் என்று சொல்லிவிட்டு, பனியில் சக விஞ்ஞானிகளுடன் மகனைக் காப்பாற்ற நீயூயார்க் செல்கிறார்.

உலகில் வடக்குப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு என்ன நடக்கிறது? நீயூயார்க் சென்ற மகன் உயிர் பிழைக்கிறானா? நீயூயார்க் தெருவில் ஏன் ஒரு கப்பல் வருகிறது
என்பதையெல்லாம் வெள்ளித் திரையில் காணலாம்.

முதலிலேயே சொன்னதுபோல உப்புச் சப்பு இல்லாத கதை. Independence Day படத்தை இயக்கிய Roland Emmerich இப்படத்தையும் இயக்கி இருக்கிறார்.

படத்தில் அழிவுகள் எல்லாம் கடகடவென்று நடப்பதால் கொஞ்சம் நம்பகத்தன்மை இல்லாமல் இருந்தாலும், இயற்கையின் சீற்றம் என்பதால் கட்டிப்போட்டுவிட்டது. படத்தில் காட்டுவதுபோல ஆறு நாட்களில் எல்லாம் நடக்காவிட்டாலும் வருடக்கணக்கில் நடக்கும்/நடக்கலாம். நான் இப்படிச் சொல்வதற்கு, சில மாதங்களுக்கு முன்பு பார்த்த ‘பிபிசி’ தயாரித்த “Walking with Dinosaurs” என்ற தொடரும் காரணமாக இருக்கலாம்.

ஹாவாய்த் தீவுகளில் சில வருடங்களுக்கு முன்பு Maui என்ற தீவில் பெரும் சூறாவளி வீசி பலத்த சேதம் விளைவித்தது. அங்கே இப்போதும் Tsunami என்ற tidal waveகளுக்குப் பயப்படுகிறார்கள். அதைப்போன்ற Tidal Wave இப்படத்தில் வருகிறது. டெக்சாஸ் பகுதிகளில் வீசும் Tornado கலிபோர்னியாவில் வீசுகிறது.

இங்கே, நண்பர்கள் சொன்னதுபோல இயற்கையின் சீற்றத்துக்கு முன்பு வேறெதுவும் நிற்க முடியாது. அது சென்னையில் சில நொடிப்பொழுதுகளே நடந்த நிலநடுக்கமானாலும் சரி, Mauiஇல் வீசிய Tsunamiயானாலும் சரி, ‘Perfect Storm’ திரைப்படத்தில் வீசிய
பேய்ச் சூறாவளியானாலும் சரி நிஜமான விஷயங்கள். ‘Perfect storm’ நிஜக் கதை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதே போல நிஜமாக நடக்காததென்றாலும், “The Poseidon Adventure” படம் 1970களில் பலருக்கு இயற்கையின் சீற்றத்தை நினைவுபடுத்தியது.

படத்தை, இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்திருந்தால் நிஜத் தன்மை வந்திருக்கும். இப்போது ‘Independence Day’படம் பார்த்துவிட்டு எந்தவொரு தாக்கமுமில்லாமல் வீடு திரும்பியதுபோலச் சிலரும்; சுற்றுப்புறச் சூழலைக் காப்பாற்ற நினைப்பவர்கள் மிகவும் ஆக்ரோஷ்த்துடனும், என்னைப்போல சிலர் கொஞ்சத் தாக்கத்துடனும் வீடு திரும்பி இருக்கிறோம்.

படத்தில் சில சுவாரசியமான காட்சிகளும் இல்லாமல் இல்லை.

1. அமெரிக்கர்கள் தெற்கு நோக்கிச் செல்லவேண்டும் என்று அறிவித்ததும் அமெரிக்கர்கள் மத்திய அமெரிக்க நாடுகளுக்கு அகதிகளாகப் படை எடுப்பது.

2. ஓரளவுக்கு மேல் அகதிகள் வந்து சேர்ந்துவிட்டதால், தன்னால் பராமரிக்க முடியாது என்று மெக்சிகோ அமெரிக்கர்களை திருப்பி அனுப்ப முயல்வது.

3. லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்கர்களை அகதிகளாக
ஏற்றுக்கொண்டால், அவர்கள் அமெரிக்காவிடம் வாங்கிய கடனைச் செலுத்த வேண்டியதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பது.

4. வசனம் எழுதியவர் கொஞ்சம் ஓவராய் உணர்ச்சி வசப்பட்டு எழுதிய ஒரு வசனம்.’We called them third world countries. But by accepting us and extending hospitality they proved that we are wrong and —–”. அமெரிக்க ஜனாதிபதி Weather Chennelஇல் வந்து நாட்டுமக்களுக்கு அறிவிப்பு செய்யும்போது மேற்கண்ட வசனத்தை உச்சரிப்பார்.

படம் பார்த்துவிட்டு, நீங்க என்ன நினைச்சீங்கன்னு எழுதுங்க.

This page is powered by Blogger. Isn't yours?