Thursday, April 21, 2005
Madamae Sata: மேதமெ சாத்தா
அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: நாராயண்
சற்று முன் பார்த்து மலைத்து விட்டேன் - மேதெமே சாத்தா (Madame Sata - ஸ்பானிஷில், மேடம் என சொல்லுவதில்லை, ஆகையால், "மேதமே"). உள்ளே செல்லும்முன், இந்தப்படம், சான் பிரான்ஸிஸ்கோ திரைப்பட விழா (2003), டொரன்டோ திரைப்பட விழா (2002), கான்ஸ் திரைப்பட விழா (2002), மியாமி திரைப்பட விழா (2003) களில் பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டது. மேலும், சிறந்த படத்துக்கான விருதை சிகாகோ திரைப்பட விழாவிலும்,(Gold Hugo Award for Best Film), சிறந்த அரங்க அமைப்புக்கான விருதை ஹவானா திரைப்பட விழாவிலும், சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளை (லான்சரோ ரொமொஸ் - சாத்தா-வாக நடித்தவர்) ஹியூலாவா ஈப்ரோ-அமெரிக்க திரைப்பட விழாவில் வாங்கி அசத்திய படம்.
இந்தப் படம், பின் நவீனத்துவப்பாணியில் சொல்லவதாயிருந்தால், "தயிர்வடைகளுக்கு / கலாச்சாரம் என்ற ஒற்றைப்பார்வை" பார்ப்பவர்களுக்கான படமில்லை. அவர்கள் தயவுசெய்து மேற்கொண்டுப் படிக்காமல், வேறு எதாவது உருப்படியான வேலை செய்யலாம் / ஆனந்தவிகடன்/குமுதம் படிக்கலாம்.
ஃஜோவ் பிரான்ஸிஸ்கோ தோஸ் சாந்தோஸ் சுருக்கமாய், "சாந்தோஸ்" என்பரின் உண்மைக்கதை தான் மேதெமே சாத்தா. இந்தக் கதை நடந்தது/நடப்பது 1930-ன் ஆரம்பங்களில்.
இடம்: லாபா, ரியோ டி ஜெனிரோ களம்: அடித்தட்டிலும், அடித்தட்டில், தெருக்களில் வாழ்ப்பவர்கள் இருக்குமிடம். சமுதாயத்தின் எல்லா அழுக்குகளையும் ஒரு சேரப் பார்க்கக்கூடிய இடமது. இந்த கதையில் வரும் எல்லா கதாப்பாத்திரங்களுமே நிஜத்தில் வாழ்ந்தவை.
கதைக்கு போகுமுன், சாத்தா ஒரு முரடன், ஒரினப் புணர்ச்சியாளன் (queer), கலைஞன், பெண்வேடமிட்டு மதுபான விடுதிகளில் ஆடும் காப்ரே நடனக்காரன்(transvestic), வெறிப்பிடித்த காதலன், 7 குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்ட பொறுப்பான தகப்பன், "சாம்பா" நடன கலைஞன், முன்கோபி, கிரிமினல் என பல்வேறுமுகங்கள் கொண்ட கறுப்பின மனிதன்.
தபு: ஆண் விபச்சாரி, பெண்ணாக மாறவேண்டும் என்று ஆசைப்பட்டு, பெண் சகவாசத்திலேயே, பெண்ணுடையணிந்து வலம்வரும், சாத்தாவின் நண்பன்.
லொரித்தா - விபச்சாரி, அதைவிட நல்ல வார்த்தை Whore (பாலியல் தொழிலாளின்னு சொல்லமுடியாது - கதை நடந்தது 1930-களில்)
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, ஏழு வயதிலேயே தாயால் விற்கப்பட்டவன் தான் சாத்தா. வறுமையும், வன்முறையும், கொலைவெறியும், குடியும், பொறுக்கித்தனமும், அழுக்கும் நிறைந்த லாபாவின் தெருக்களில் வளர்ந்தவன். கொலை, கொள்ளை, துரோகம், விபச்சாரிகள் என் உலகின் எல்லா 'நல்ல' பழக்கவழக்கங்கள் நிரம்பியுள்ள தெருக்களில் சுற்றி தன்னை வளர்த்துக் கொண்டவன் அவன். ஒவ்வொரு நாளும் உயிருக்கு உத்தரவாமில்லாத வாழ்க்கை. எந்நேரத்திலும், ஒரே ஒரு துப்பாக்கிக்குண்டில் உயிர் போகலாம் என்ற நிலையில், வாழ்வித்திருத்தலை சாமர்த்தியமாக செய்து காட்டியவன்.எந்தவிதமான படிப்பறிவும் இல்லாமல், உயிர் பிழைத்திருத்தல், திருடுதல், புணருதல், என்பதே வாழ்க்கையாக வாழ்ந்தவன். இருட்டும், புகையும், அழுக்கும், உலகின் அத்தனை மொள்ளமாரித்தனங்களுக்கும் இடையில், அடித்தட்டு மக்களின் கலைஞனாய், பாடகனாய், "சாம்பா" நடனக்காரனாய் வாழ்ந்து தன், 76 வயதில் மறைந்தவன் சாத்தா. சாத்தாவின் மேல், பல்வேறு விதமான வழக்குகள். தன் வாழ்வில், 28 வருடங்களை சிறையில் கழித்தும், கலையின் மேலுள்ள தீவிர ஆர்வமும், காதலும், அவரைப் பற்றி பேச வைக்கின்றது.
இந்தப் படத்தை ஒரு மிடில் கிளாஸ் மனிதராய் பார்த்தால் இந்தப் படம் ஒரு அர்த்தமற்ற ஒரு 'ஆண்டி ஹீரோ'வை முன்னிறுத்தும் படமாகவே தெரியும். வன்முறையின் கோரமும், வறுமையும், தெருக்களிலிருந்துக் கொண்டு ஒரு கலைஞனாய், தன்னை முன்னிறுத்திக் கொண்ட, நகமும், சதையும், உதையுமாய் வாழ்ந்த மனிதனின் கதை இது. படத்தில், தரம்குறைந்த வார்த்தைகள் அதன் வழியே நாம் உணரும், வாழ்வின் கோரம், சாதாரண வார்த்தைகளில் சாத்தா சொல்லும் நிரம்பியிருக்கும் வலி நிறைந்த வாழ்வின் உண்மைகள்,
சாதாரணமாகவே பிரெசிலின் இயக்குநர்கள் திறமை வாய்ந்தவர்கள், அதிலும் இப்படியொரு 'ரா'வான கதை கையில் கிடைத்தால் சொல்லவா வேண்டும். இந்த படத்தின் சிறப்பம்சமே, சாத்தாவாக நடித்த லான்சரோ ரொமொஸ். ரொமொஸ் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல முடியும். ஆறடி உயரத்தில், கறுப்பாய், சாத்தாவை அப்படியே நம் கண் முன்னால், கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். அடிதடியாகட்டும், இன்னொரு ஆணுடன் புணருதலாகட்டும், மேடையில் உச்சஸ்தாயில் பாடிக்கொண்டே ஆடுவதாயாகட்டும், கடுமையான முகத்துடன் பேசுவதாகட்டும், மனிதர் பின்னி எடுத்து விட்டார். படமுழுக்க, அழுக்கு உடைகளுடன் அலையும்போதும், போலீசிடம் அடி வாங்கி, மூக்கு புடைக்க வெறித்தப் பார்வை பார்க்கும்போதும், பெண் உடையணிந்து, லாபாவில் உள்ள ஒரு மகா மட்டமான பாரில் தன்வசமின்றி அவர் ஆடும் ஆட்டம், குதூகலமான 'சாம்பா" இசை, அதன்பின் நடக்கும் வன்முறைகள், என படமுழுதும் நாம் கண்களை நகர்த்த வாய்ப்பே தராமல், வாழ்ந்திருப்பார்.
சிறையில் அடிப்பட்டு வாய்ஸ் ஓவரில், அவர் மேலுள்ள வழக்குகளை, குணாதிசயங்களை விவரிப்பதிலிருந்து ஆரம்பிக்கும் படம் அதே பிரேமில் முடியும். இந்தப் படத்தின் காட்சியமைப்புக்களைப் பற்றியோ, சீன்களையோப் பற்றி இங்கு பேசமுடியாது. அது ஒரு அனுபவம்.
கேட்டதில் பிடித்தது, இந்தப் படத்தின், இயக்குநரின் கமெண்ட்ரியில் ஒரு வாக்கியம்
"Sata re write his history with his body. His love for his body made him a better soul among the meanest people in laba"
சென்னையிலிருந்தால், இந்தப் படம் சினிமா பேரடைசோவில் கிடைக்கின்றது, மறக்காமல் வாங்கிப் பாருங்கள்.
இந்தப் படத்தைப் பற்றிய பிற விமர்சனங்கள்:
http://www.reelmoviecritic.com/holiday2002/id1749.htm
http://www.wellspring.com/movies/text.html?movie_id=7&page=synopsis
http://www.haro-online.com/movies/madame_sata.html
இதைத் தாண்டிப் பார்த்தது "யி-யீ" என்ற ஒரு ஜப்பானியப் படம். மிக, மிக மெதுவாக மறந்துப் போன காதலை நினைக்கும் ஒரு அப்பாவும், காதலை மறக்கக் கோரும் ஒரு பெண்ணுமான கதை. நன்றாக இருந்தாலும், சாத்தா தந்த பாதிப்பில் இது அடிப்பட்டுப்போய் விட்டது. ஒரு முறைப் பார்க்கலாம்.
'சாத்தா' வின் டிவிடியில் "ரஷ்யன் ஆர்க்" என்ற ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படத்தின் டிரைய்லர் பார்த்தேன். எஸ்.ராவின் உலக சினிமாவிலும் இந்தப் படத்தைப் பற்றிய குறிப்பு இருந்தது. யாரேனும் பார்த்திருக்கீறீர்களா? பார்த்திருந்தால் எழுதுங்கள்.

"I was born an outlaw, and that's how I'll live";இருட்டில் நகரும் கதையில் விடுதிகளிலும், அரங்கிலும், சாலைகளிலும் தெறிக்கும் வண்ணங்கள் என ஒரு வாழ்க்கையே கண் முன் நகரும். நம்மை நெருடச் செய்யும்.
"My angel, the bell tolls and the night cries-flee this stinking world";
"What do you want? I want the world."
"Men dont' use guns. they use their fists. let's fight"