Friday, April 22, 2005
Z: ஸீ
அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: பெயரிலி
Costa-Gavras இன் Z (1969)
1963 மே 22, புதன்கிழமை; தீசாலோனிகீ (Thessaloniki), கிரீஸ்; கிரேக்கத்தின் இடதுசாரிக்கட்சியான Eniaia Dimokratiki Aristera (EDA) இன் பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் Grigoris Lambrakis, CIA, முன்னைய KGB போன்றவற்றின் கிரேக்கப்பதிப்பான KYP (Kentriki Ypiresia Pliroforion) இனாலே ஏவிவிடப்பட்ட வலதுசாரிக்குண்டர்களாலே கொல்லப்படுகின்றார். அவர் "சமாதானத்துக்கான கிரேக்கத்தின் அமைப்பு"க்காகப் பேசுவதாக இருந்த களம், 'பொதுக்கூட்டத்துக்கு உத்தரவு அனுமதி இல்லை' என்று நகர்காவலர்களாலே மறுக்கப்படுகிறது. வெகுவான முயற்சியின்பின்னர் அமைப்பாளர்கள் வேறொரு நிகழ்களத்தினைப் பெற்றுக்கொள்ள, நகர்காவலர்கள் ஏனோதானோவெனப் பாதுகாப்பினை வழங்குகின்றனர். சூழ்ந்திருந்து கத்தும் வலதுசாரிக்குண்டர்களிடையே தனதுகூட்டத்துக்கு அவர் நடந்து செல்லும்போது, நீல நிற முச்சக்கரவண்டி ஒன்றிலே வந்து அவர்மேலே தாக்குதல் நிகழ்கின்றது. தப்பிப்போகும் முச்சக்கரவண்டிக்காரர்களைத் துரத்திச்செல்லும் ஒரு கட்டிடக்கொத்தனார் கொலைகாரனை வெளியே இழுத்துப்போடுகின்றார். வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் க்ரகோரிஸ் மே 27 மரணமடைகின்றார். "O Lambrakis Zei! (இலம்ரிகாஸ் வாழ்கிறார்!)" என்ற கோஷத்துடன் இடதுசாரி இளைஞர்கள் குரலெழுப்புகின்றார்கள். தொடர்ந்த விளைவுகளாலே ஆறுமாதங்களிலே ஆட்சியிலிருந்து வலதுசாரிப்பழமைவாதிகள் தோற்றுப்போகின்றனர். ஆனால், 1967 ஏப்ரல் 21 இல் இராணுவப்புரட்சி நிகழ்கின்றது; மீண்டும் ஜனநாயக ஆட்சி 1974 இலே வருகின்றது.
இது நிகழ்வு.
1966 இலே கிரேக்க எழுத்தாளர், Vassilis Vassilikos, 'Z' என்றொரு நூலை எழுத, அதை 1969 இல் பரிஸிலே வசிக்கும் கிரேக்க இயக்குநரான Costa Gavrநூs பிரெஞ்சு, கிரேக்க நடிகர் நடிகைகளுடன் "Any resemblance to actual events, to persons living or dead, is not the result of chance. It is DELIBERATE" என்ற மறுப்புக்கூற்றினை வெளியிடுவதோடு படமாக்குகின்றார்.
சொல்லப்படாத ஆண்டு; சொல்லப்படாத நாடு; ஆனால், கிரேக்கத்தின் குறியீடுகள் இராணுவ உடையிலிருந்து நடைபாவனை வரைக்கும் தெளிவாகத் தோன்றுகிறன. இராணுவ அதிகாரிகளின்கூட்டத்திலே, இராணுவக்காவலர்களின் உயர் அதிகாரி, நாட்டுக்கு ஹிப்பிகள், கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள், சமவுடமைக்காரர்களாலே நிகழக்கூடிய ஆபத்துகளைச் சொல்லி, "Forces of Evils" இற்கு எதிரான நடவடிக்கைகளைப் பற்றிப் பேசுவதோடு படம் ஆரம்பிக்கின்றது. அடுத்ததாக காட்சி நகர, ஓர் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் (அவர் ஒரு வைத்தியர் என்பதுங்கூட, குறிப்பாகக் காட்டப்படுகின்றது) உரையாற்ற வரும்போது, பேசுங்களம் மாற்றவேண்டியதாகின்றது. பேசமுன்னாலே, மனைவியுடன் தொலைபேசிவிட்டு வெளியே வருகின்றவர், முச்சக்கரவண்டியிலே வருகின்றவர்களாலே நகர்காவலர்கள் முன்னாலேயே தாக்கப்படுகின்றார்; தப்பிச்செல்லும் கொலைகாரர்களைத் துரத்திக்கொண்டோடுகின்றார் அவரது உதவியாளர் ஒருவர். வைத்தியசாலையிலே இவர் மரணமாகின்றார்; "He Lives!" என்றபடி இளைஞர்கூட்டம் நகர்கின்றது; மறுபுறம், விசாரணை ஒன்று கண்துடைப்பாக நிகழ்த்தவேண்டியதாகின்றது; ஆனால், அதற்காகப் பொம்மையாக இருப்பாரென்ற விதத்திலே தேர்ந்தெடுக்கப்பட்ட இளம்நீதிபதியோ அவ்வாறாக நடப்பதாக இல்லை; இதைத் தவிர, பத்திரிகைக்காகச் செய்திதேடி அலையும் ஒரு இளம் பத்திரிகையாளன் ஒருவன்; கொஞ்சம் கொஞ்சமாக விசாரணை முன்னேறும்போது, சாட்சிகள் தாக்கப்படுகின்றனர்; பயமுறுத்தப்படுகின்றனர்; நீதிபதிகூட, சட்டமாவதிபர், இராணுவம் ஊடாகப் பயமுறுத்தப்படுகின்றார். ஆனால், வலதுசாரிக்குண்டர்களின் அமைப்புக்கும் இராணுவத்துக்குமான நிழலான தொடர்புகள் வெளிப்படும்போது, சம்பந்தப்பட்ட எல்லா இராணுவ அதிகாரிகளையும் சட்டத்தின் முன்னாலே நீதிபதி அழைப்பதோடு படம் ஓட்டத்திலே முடிவுக்கு வந்தாலுங்கூட, பின்னாலும் தொடரும் மூன்று நிமிடங்கள், அதன் பின்னான இராணுவப்புரட்சியின்கீழே புரட்சியின்பின்னாலே, கட்சிக்காரர்களுக்கும் நீதிபதிக்கும் பத்திரிகையாளருக்கும் நிகழும் அவலங்களையும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் செய்யப்படும் வசதிகளும் விடுதலைகளும் செய்திகளாகத் தருவதோடு, இராணுவச்சட்டத்தின்கீழே நாட்டிலே தடை செய்யப்பட்டவற்றின் பட்டியலையும் கொடுப்பதாக முடிகின்றன.
இது நிழல்.
க்வ்ராஸின் எல்லாப்படங்களிலும் அரசியலின் முகத்தினைக் காணலாம்; அரசியல்சார் படங்களை இன்றைய காலகட்டத்திலே பலர் எடுத்துவிட்ட, எடுக்கின்றபோதிலே, க்வ்ராஸ் மற்றோரிலிருந்து விலகி நிற்பது, எவ்விதம் தான் படமாக்குகின்றார் என்பதிலேதான். இவருடைய படங்களிலே இவருடைய அரசியற்சார்பினை மிகவும் வெளிப்படையாக நின்று கொடுப்பது வழக்கம்; அதுவும் முகத்திலே அடித்தாற்போல கொடுப்பது. இந்தவகையிலெ ஒலிவர் ஸ்ரோன் ஓரளவுக்கு இவரோடு பொருந்தி வருவார் (குறிப்பாக, அவருடைய JFK, Z உடன் ஒத்துநோக்கப்படக்கூடியது). அதேநேரத்திலே, மைக்கேல் மூர் படமாக்கியவற்றிலே இருக்கும் அளவுமீறித் திகட்டும் கருத்துத்திணிப்பும் இவரின் படைப்புகளிலே தோன்றுவதில்லை. கியூபாவின் அலியா இன் நகைச்சுவை உணர்வு கலந்த, சீனாவின் சென் காய்கே இன் பண்பாட்டின் செழுமை பொருந்திய படைப்புகள்போல், அரசியலின் தாக்கத்தினைப் பூடகமாக அழகுணர்ச்சியோடு சொல்லவும் க்வ்ராஸ் முயல்வதுமில்லை. (Platoon இனை எடுத்த ஒலிவர் ஸ்ரோன் கூட Heaven & Earth இலே அதே களத்தினை இப்படியான அழகுணர்வோடு நகர்த்தும் முயற்சியினைச் செய்திருக்கின்றார்) ஆனால், அப்படியான நெறியாளுகையிலே உள்ள மிகவும் காட்டமான அணுகுமுறையும் அவரின் படங்களைத் தொகுக்கும்போது (editing) காணப்படும் காட்சிகளின் கதம்பம்போன்ற ஒட்டலோவியத்தன்மையும் (collage painting; குறிப்பாக, இந்தப்படத்திலே ஒவ்வொரு காட்சியும் முன்னைய காட்சியின் தொடர்ச்சியாகவும் அடுத்த காட்சியைத் தொடர்பு தருவதற்காகவுமே தோன்றினாலுங்கூட, அவற்றிடையே ஓர் இயல்பான தொடர்மாறுகை இருப்பதில்லை.) படக்கருக்களுமே அவருடைய படங்களின் வெற்றிக்குக் காரணமாகின்றன என்று தோன்றுகின்றது.
Z, தொடக்கத்திலே மெதுவாக நகரும் மிகவும் ஆழமான அரசியற்சித்தரிப்பாகத் தோன்றி. இறுதியிலே காட்சியோட்டத்திலும் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கிடையேயான வேகப்படுத்திய வெட்டியொட்டல்களும் அதிலே விகாரப்படுத்தப்பட்டுக் கேலிச்சித்திரங்களாகத் (caricatures) தோன்றும் இராணுவ அதிகாரிகளும் படத்தின் இறுதி மூன்று நிமிடங்களிலே சுருங்கச்சொல்லப்படும் விளைவுகளின் அபத்தத்தன்மையும் [Narrator: Concurrently, the military banned long hair on males; mini-skirts; Sophocles; Tolstoy; Euripedes; smashing glasses after drinking toasts; labor strikes; Aristophanes; Ionesco; Sartre; Albee; Pinter; freedom of the press; sociology; Beckett; Dostoyevsky; modern music; popular music; the new mathematics; and the letter "Z", which in ancient Greek means "He is alive!" ] ஒரு நையாண்டித்தன்மையைத் தர முடிகின்றது; அந்த உருமாற்றம் எங்கே நிகழ்கின்றதென்று தோன்றாத வண்ணம் தந்திருப்பது க்வ்ராஸின் வெற்றியெனலாம்.
பிரெஞ்சு நடிகர்களிலே பிரபல்யமான Yves Montand , கிரீஸின் Irene Papas போன்றோர் நடித்திருந்தாலுங்கூட, படத்திலே குறிப்பாக நாயகன் நாயகி என்று எவருமே முக்கியத்துவப்படுவதில்லை. கொலை செய்யப்படும் அரசியல்வாதி ஆரம்பத்திலே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றார்; இடையிலே பத்திரிகையாளன் ஓரளவுக்கு முக்கியமாகின்றான்; இறுதியிலே நீதிபதி முக்கியமாகின்றார். படத்தின் எல்லாப்பகுதியிலுமே இராணுவக்காவலர்களின் மேலதிகாரி பரந்து வருகின்றார். அரசியல்வாதியின் மனைவியின் பாத்திரத்திற்குப் (ஐரீன் பாபாஸ்) படத்திலே தேவையிருக்கவேயில்லை. இந்தப்படத்தின் பாத்திரத்துக்கு மாறாக, தென்னமரிக்காவிலே CIA அதிகாரியாக க்வ்ராஸின் னtat de siழூge இலே தோன்றும் Montand அதிலும் கொலை செய்யப்படுவார். Arika Kurosawa இன் வெற்றியான படங்களோடு Toshiro Mifune இனைச் சேர்த்துப்பார்ப்பதுபோல, க்வ்ராஸின் நல்ல சில படங்களோடும் Montand இனைச் சேர்த்துப் பார்க்கலாம். Papas ஏற்கனவே Alexis Zorba இலே விதவையாகத் தோன்றியிருக்கின்றார். எகிப்திய மம்மிகளிலே காணப்படும் பெண்களைப் போன்றதொரு இயல்பிலேயே சோகமும் பெருமையும் ஈர்ப்பும் கொண்ட முகம் அவரது. அதுவும் இந்தப்படத்திலே சில காட்சிகளுக்கு உதவியிருக்கின்றது.
இன்றைய நிலையிலே பார்க்கும்போது படத்திலே எரிச்சலூட்டுவது, அதன் ஒளிப்பதிவும் திரையை அப்பும் வண்ணமும்; கிட்டத்தட்ட, எழுபதுகளிலே வந்த நீலப்படங்களைப் பார்ப்பதுபோன்றதோர் உணர்வினைத் தருகின்றது. படத்தின் பின்னணி இசை அமைவாக இருக்கின்றது (சாட்சிகளைப் பின் தொடர்தலைக் காட்டும் காட்சிகளிலே தனித்தபேலாகூட பயன்படுத்தியிருக்கின்றது); இந்தப்படத்தின் விளைவாக இதன் இசையமைப்பாளர் Mikis Theodorakis வீட்டுக்காவலிலே வேறு கிரேக்கத்திலே வலதுசாரி அரசினாலே வைக்கப்பட்டார்.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னாலே, இன்றைக்கும் இந்தப்படம் சுவை குன்றாமலே பார்க்கும்வண்ணம் இருக்கின்றதென்றால், அதற்கான காரணம் வரலாற்றிலிருந்து எவருமே ஏதும் கற்றுக்கொள்வதில்லை என்றே நினைக்கிறேன். நாடு திரும்பும் அரசியல்வாதி ஆட்சியிலேயிருக்கின்றவர்களாலே கொலைசெய்யப்படுவது பின்னாலே, மார்க்கோஸ் அக்கினோவை கொலை செய்தபோது நிகழ்ந்திருக்கின்றது. இராணுவ அதிகாரியின் பேச்சும் செயற்பாடுகளும் 70 களின் இலத்தீன் அமெரிக்காவினைப் பிரதிபலித்திருக்கின்றன (இவற்றினை முன்னிலைப்படுத்தியும் க்வ்ராஸ் இரண்டு படங்கள் எடுத்திருக்கின்றார்; னtat de siழூge & Missing). எழுபது எண்பதுகளின் மூன்றாம் உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் இப்படம் பொருந்தும்.
Z is (STILL) Alive!
==============
இயக்குநர்: Costa-Gavras
வெளியிடப்பட்ட ஆண்டு: 1969
நடிகநடிகைகள்: Yves Montand, Irene Papas, Jean-Louis Trintignant, Franவூois Pளூrier, Jacques Perrin
ஓடும் நேரம்: 125 நிமிடங்கள்