Friday, April 22, 2005
Troy: ட்ராய்
அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: கார்த்திக்ராமஸ்
3200 வருடங்களுக்கு முந்தைய கற்பனைக் காவியங்களின் வரிசையில் உள்ள கிரேக்க காவியம் ஒன்றின் ஒளிப்பதிவு.மிகவும் நேர்த்தியான முறையில் காவியத்தை கண்முன்னால் கொண்டுவந்துள்ளனர்.
இனி கதை.
அகெம்னான் என்பவன் கிரேக்க சக்ரவர்த்தி. அவன் தம்பி மெனுலாஸ். அகெம்னானுக்கு கடலுக்கு அப்பால் உள்ள் நாடாகிய ட்ராய்-யை கைப்பற்றும் நோக்கம் உள்ளது. மெனுலாசுடன் ட் ராயின் மூத்த இளவரசன் ஹெக்டரும் ,இளையவன் பாரிஸ¤ம் ஒரு அமைதி ஒப்பந்தம் நடத்துகிறார்கள். அந்த ஒப்பந்தத்தின் போதே மெனுலாசின் மனைவி ஹெலனுக்கு (கள்ள) தொடர்பு ஏற்பட்டு காதலிக்கிறார்கள். அப்போதெல்லாம் காதல் என்றால் முதல் நாளே உடலுறவினோடுதான் ஆரம்பிக்கும் போல. அருமையான உலகமாய் இருந்துள்ளது. ஒரு வார காலத்திற்குள் அவர்களது காதல் முதிர்வடைகிறது.ஒரு கணம் பிரிந்திருந்தாலும் ஒரு யுகம் என்றாகிவிடுகிறது.எனவே அண்ணன் ஹெக்டருக்குக் கூடத் தெரியாமல் ஹெலனை தனது கப்பலில் ஏற்றிக் கொண்டு வருகிறான் பாரிஸ். பாதி பயணத்தின் போது விஷயமறிந்து , தம்பியின் முட்டாள்த்தனத்தை சாடுகிறான் ஹெக்டர். ஹெக்டரின் கதாபாத்திரம் கிட்டத்தட்ட நமது மகாபாரத தருமனைப் போன்றது எனச் சொல்லலாம். கடமையில் தவறாதவன், சிறந்த மகன், சிறந்த இளவரசன், சிறந்த போர்வீரன்.
காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்த பாரிஸ் தூக்கிச் சென்றதால், தன் அண்ணன் அகெம்னான் உதவியோடு ட் ராய் மீது ப்டையெடுப்பு நடத்துகிறான் மெனுலாஸ். அண்ணன் அகெம்னானுக்கோ தம்பியின் மானம் என்ற போர்வையில் ட் ராயை கைப்பற்று ஆசை. அகில்லிஸ் தனது நண்பனான இன்னொரு சிற்றரசனின் வேண்டுகோளுக்கு இணங்கியும், உலகத்தின் சிறந்த வீரன் அகில்லிஸ் என்று வரலாறு போற்றவேண்டும் என்ற ஒரு வித வீரம் நிறைந்த திமிராலும் அகெம்னானுடம் ட் ராயின் மீதான படையெடுப்பில் பங்குபெறுகிறான். முதல் அகில்லிஸின் கப்பல் வேகமாய் ட் ராயை அடைகிறது. ஒரு 50 பேர் கொண்ட தன்னுடைய படையின் உதவி மட்டும் கொண்டு ட் ராயின் முக்கிய கடற்கரை கோயில் பகுதியில் நுழைந்து வெற்றி பெறுகிறான் அகில்லிஸ். ஆனால் இந்த வெற்றியை கொண்டாடும் அகில்லிஸ் வெற்றி தனதே என்று சொல்ல சக்ரவர்த்தியாகிய தன் பெயர்தான் வரலற்றில் பொறிக்கப்பெறும் என்கிறான்.
மேலும் அகில்லிஸ் காதல் கொண்டிருந்த, ட் ராயின் இளவரசர்களின் ஒன்று விட்ட சகோதரியாகிய ப்ரெய்சிசை தன் போர் வீரர்களுக்கு
பொழுது போக்குக்கு கொடுக்கிறான். இதைக்கண்டு கொதிப்பாகிப்போன அகில்லிஸ் அகெம்னானை கொன்றே தீர்வேன் என்று சபதம் செய்கிறான். அன்று முதல் அகெம்னானுக்கு போரில் உதவுவதில்லை என்கிறான்அகில்லிஸ்.
அகில்லிஸின் உதவியில்லாமல், சென்ற அகெம்னானின் படை ட்ராயின் படையால் தோற்கடிக்கப்படுகிறது.
ரசிக்கத்தகுந்த காட்சிகள் என இவற்றைச் சொல்லலாம்.
அகில்லிசின் முதல் சண்டைகாட்சி. அகில்லிசாகவே மாறிவிட்டார் பிராட் பிட். அது போல வளைந்து நெளிந்து சண்டையிடும் ஹெக்டருடனான அரைஇறுதி சண்டைக்காட்சி. அகில்லிசின் வீரம் புகழும் இப்படித்தான் இருக்கும் என நம்பவைக்கிறார். கன்னியாஸ்திரியாக இருந்த ப்ரெய்சிசினுடனான் காதல் காட்சியும்,வசனங்களும் அருமை.
கதைக்கட்டமைப்பு.
ட்ராயின் மன்னர், கடவுள்களின் நமிக்கை கொண்டவர். அந்த நம்பிக்கையின் பொருட்டு எடுக்கும் எல்லா முடிவுகளும் சீரழிவுக்கு கொண்டு செல்லும். ஆங்காங்கே அவரது நம்பிக்கை கேள்விக்குரியதாக்கும், ஹெக்டரின் வசனங்கள். அது போலவே கன்னியாஸ்திரி ப்ரெய்சசின் வசனங்களை கடவுள் மறுப்பு வசனங்களால் எதிர் கொள்வான் அகில்லிஸ். ட்ராயின் கடைசி அழிவுக்கும் ,காரணம் தந்தையின் கடவுட் கொள்கையாய்த்தான் முடியும்.
மேலும் சில குறிப்புகள் முடிந்தால் நாளை.