Thursday, April 28, 2005

Mystery of the Nile

Mystery of the Nile
அசல் வலைப்பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: சந்திரசேகரன் கிருஷ்ணன்

பார்த்த படம்



தி மூலத்தையும் ரிஷி மூலத்தையும் ஆராயக்கூடாதென்பார்கள். ஆனால் இந்த பதிவு நதியின் மூலத்தை ஆராய்ந்தவர்களைப் பற்றியது. இந்த பதிவிற்கான கரு இப்படி தான் தோன்றியது. வார இறுதியில் ஹோட்டலறயில் அடைந்து கிடப்பதில்லை என முடிவு செய்த பின் எங்கு செல்வதென்ற குழப்பம் தொற்றிக் கொண்டது.


எனது neighbourhood-ஐ காலார வலம் வரலாம் என முடிவு செய்த போது தான் காரோட்ட தெரிந்த என்னோடு அலுவலகத்தில் பணி செய்யும் நன்பனொருவன் ஏதாவது சினிமாவுக்கு போகலாம் என்றான். சரி என இணையத்தை மேய்ந்ததில் சட்டென தட்டுபட்டது “Mystery of the Nile”. Imax டாக்குமென்ட்ரியான இதற்கு எந்த எதிர்ப்பும் தொரிவிக்காமல் ஒத்துக் கொண்ட அவனுக்கு நன்றி.
பாஸ்குவேல் ஸ்கேட்டுரோவின் தலைமையில் ஒரு குழு (ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட், ஒரு ஹய்ட்ராலஜிஸ்ட், ஒரு சினிமாடோ கிராபர், ஒரு போட்டோகிராபர், ஒரு ஜர்ணலிஸ்ட்) River Expedition மேற்கொள்கிறார்கள். My preveious sentence is definitely an understatement. அது அவர்கள் செய்திருக்கும் சாதனையை மிக சாதரண வார்த்தைகளில் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இவர்களின் இந்த expedition வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மனித சமுதாயத்தில் நைல் நதியின் முழு நீளத்தையும் (5240 கிலோமீட்டர்கள்) அதன் பாதையிலேயே பயணம் செய்து கடந்த முதல் குழு இவர்கள் தான். எதியோப்பியாவிலிருக்கும் லேக் டானாவிலிருந்து புறபட்டு 114 நாட்கள் நீண்ட இப்பயனத்தின் முடிவில் April 28, 2004 மெடிட்டேரியனை அடைந்திருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டது.
இந்த பயணம் குறித்து சொல்லும் போது பாஸ்குவேல், “ எந்த உயிர் சேதமும் தீவிர காயமுமின்றி இந்த பயணம் முடிவடைந்தே அதன் வகையில் ஒரு வெற்றி” என்கிறார். நிச்சயமான வார்த்தை. என் அருகில் அமர்ந்து படம் பார்த்த ஒரு பெயர் தெரியாத தாத்தா “I closed my eyes when they dived into the falls.” என்றார். இந்த டாக்குமென்ட்ரி Imax -இல் படமாக்கப் பட்டிருப்பதால், பயணக்குழு சந்தித்த ஆபத்துகளின் வீரியத்தை ஒரு சதவிகமாவது உணர முடிகிறது. இது நீங்கள் இருக்கும் இடத்தில் திரைப்படப்பட்டிருந்தால் கட்டாயம் பாருங்கள். ஒரு விவசயி நைல் நதியை அதன் கரைகளில் அமர்ந்து வியக்கும் காட்சியுடன் துவங்கும் இந்த விவரணை படத்தை நீங்கள் அணுகுவதற்கு இந்த பதிவு ஒருவேளை உதவி செய்யலாம். ஆதலால் இந்த பதிவு ஒரு விவரணை படத்தின் விமர்சனமாக அமையாமல், விவரணை படத்தின் கருவை பற்றியதாகவும் அமைய வேண்டிய அவசியம் உள்ளது.

நைல் நதி விசித்திரங்கள் மற்றும் மர்மத்தின் உறைவிடமாகவே இருந்து வருகிறது, அதன் கரையில் வளர்ந்த எகிப்திய நாகரிகத்தைப் போலவே. ஏறக்குறைய 12000 ஆண்டுகளுக்கு முந்தைய விவசாயத்தை அடிபடையான எகிப்திய நாகரிகத்தின் அடி நாதமாக நைல் நதி இருந்து வந்திருக்கிறது. இன்றைய பூகோலத்தின் படி கிழக்காப்பிரிக்க நாட்டுகள் வழியே பாயும் இந்த நைல் நதியின் மூலம் எது என்பது பல நூற்றாண்டுகளாக ரகசியமாகவே இருந்து வந்திருக்கிறது. ஏறக்குறைய 5000 ஆண்டுகளாக கால சுழற்சியில் மாறாமல் நைல் நதியில் ஏற்படும் வெள்ளம் எகிப்திய சமுதாயத்தில் பண்முக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது. இந்த வெள்ளம் பெருக்கெடுக்கும் போது நதியின் கறைகளைத் தாண்டி விவசாய நிலங்களில் பாய்ந்து அவற்றை விவசாயத்திற்கு தகுந்ததாக மாற்றுகிறது.

எகிப்தின் இவ்வெள்ளம் அளவோடு இருக்கும் வரை தான் விவசாய பயன்பாடு, அதன் அளவு அதிகமாகும் போது நீர் நகரில் புகும் அபாயமும் உண்டு. அதற்காக நதியை கட்டுப்படுத்தும் பொருட்டு நதியின் குறுக்கே சில மடைகளும் கட்டப்பட்டிருக்கின்றன. இன்றளவிலும் நைல் நதியின் குறுக்கே அணைகள் கட்டி அதன் நீரை கிழக்காப்பிரக்க நாடுகளின் பொருளாதாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். பல நாடுகளின் குறுக்கே பாய்வதால் நதி நீர் பகிர்தல் குறித்து பல சச்சரவுகள் இந்த நாடுகளின் மத்தியில் இல்லாமலில்லை. இந்த நதியின் மூலம் கிழக்கு ஆப்பரிக்காவின் போக்குவரத்தும் நடந்திருக்கிறது.
இந்த வெள்ளத்தை ஒட்டிய புணைவுகள் ஏராளம்.

ஹிந்து சமுதாயத்திலிருப்பதைப் போலவே எகிப்திய சமுதாயத்திலும் ஏராளமான கடவுள்கள் உண்டு.எகிப்திய கடவுளான ஹெபி அடியில்லாத ஒரு ஜாடியிலிருந்து நைல் நதியின் நீரை திறந்து விடுகிறார் என்று ஒரு நம்பிக்கை அவர்களிடையே இருந்து வந்திருக்கிறது. இன்னுமொரு கதை ஐசிஸின்கண்ணீரே இந்த நைல் வெள்ளம் என்கிறது. அந்த கதை இப்படி போகிறது. ஐசிஸின் கணவன் ஆசிரிஸ் எகிப்திய மக்களை நல்ல வகையில் ஆட்சி செய்த மன்னன். ஆசிரிஸின் மீது பொறாமை கொண்ட அவன் தம்பி செத் ஆசிரிஸை தீர்க்க முடிவு செய்தான். அதன் படி ஆசிரிஸின் உடலின் அளவுபடி ஒரு பெட்டி செய்தான். ஆசிரிஸையும் வேறு சில நண்பர்களையும் ஒரு விருந்துக்கு அழைத்தான். தான் செய்த அப்பெட்டியைக் காட்டி, வந்திருப்பவர்களில் யாருக்கு அந்த பெட்டி பொருந்துகிறதோ அவர்களுக்கு அப்பெட்டி பரிசென அறிவித்தான். தன் உடலை சோதனை செய்ய அப்பெட்டியில் படுத்த ஆசிரிஸை பெட்டியில் வைத்து பூட்டி ஈயத்தை காய்ச்சி ஊற்றி அதன் கதவை அடைத்து நைல் நதியில் வீசியெறிந்தான். ஐசிஸ் அவளின் அதிகாரத்தை பயன்படுத்தி அப்பெட்டியைக் கண்டுபிடித்தாள். அதில் இறந்து கிடந்த ஆசிரிஸைப் பார்த்து அவள் விட்ட கண்ணீரே நைல் நதியின் வெள்ளம் என அக்கதை கூறுகிறது. (இந்த ஐசிஸுக்கும் மோனாலிசாவின் சிரிப்புக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்குத் தெரிய வேண்டுமானால், டான் பிரவுன் எழுதியிருக்கும் தி டாவின்ஸி கோட் படியுங்கள், இல்லை கூகுளில் தேடுங்கள்).

சரி, மீண்டும் நைல் நதிக்கு வருவோம். சற்று அறிவியல் அறிவு வளரத் தொடங்கிய காலத்தில், வான சாஸ்திர நிபுணர்கள், எப்போது வெள்ளம் வருகிறது என கணிக்க தலைப்பட்டனர். வானத்தில் >சிரியஸ்நட்சத்திரம் ஒவ்வொரு வருடமும் 70 நாட்களுக்கு சூரியனால் மறைக்கப்பட்டு மீண்டும் தோன்றும் போது நைல் நதியில் வெள்ளம்
தோன்றுவதாக கணித்துள்ளனர். (சிரியஸ் என்பது கேனிஸ் மேஜர்என்னும் நட்சத்திர கூட்டத்தில் இருக்கும் மிகப் பிரகாசமான நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தை அவ்வளவு நுணுக்கமாக கவனித்துள்ள அந்த காலத்து நிபுணர்களின் திறமையை என்ன சொல்வது). மேலும் பாரோக்களின் வரி விதிப்பு முறைக்கும் இவ்வெள்ளம் பயன்பட்டிருக்கிறது.

சிறு நாணலாக எந்த விதமான சலனமும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நதி, அசுர வெள்ளமாக ஒரு இடத்திலும், ஹோவென்ற இரைச்சலுடன் விழும் அருவியாகவும் தன்னை உருமாற்றிக் கொள்கிறது. எல்லா முக்கிய நதிகளைப் போலவே நைல் நதிக்கும் கிளைகள் உண்டு. லேக் டானாவிலிருந்து மெடிடேரியன் வரை நீண்ட கிளையை "Blue Nile" என்று வழங்குகிறார்கள். இன்னுமொறு கிளை "White Nile" என்றுமழைக்கப்படுகிறது. இந்த இரு கிளைகளும் சூடானில் உள்ள கர்டவும் என்னும் இடத்தில் சந்திக்கின்றன. இப்படி இரு கிளைகள் இருப்பினும், நைல் நதியின் மொத்த நீளத்தில் 60 % ஆக்கிரமித்திருப்பது "Blue Nile" தான். பாஸ்குவேல் தலைமையிலன குழு பெரிதும் பயணப்பட்டிருப்பது இந்த "Blue Nile"-இல் தான். வெவ்வேறு பெயர்களைப் போலவே, பல்வேறு கலாச்சாரங்களையும், பல்வேறு ரசணைகளையும் உடைய மனித சமுகத்தின் தோற்றத்திற்கு காரணமாக இந் நதி இருந்திருக்கிறது. எதியோப்பிய கிருஸ்துவர்களிலிருந்து எகிப்திய இஸ்லாமியர்கள் வரை வெவ்வேறு மதத்தை பின்பற்றும் மனிதர்களை இணைக்கும் இழையாக நைல் விளங்குகிறது.

மனிதர்கள் தவிர பல்வேறு ஜீவ ராசிகளின் வாழ்வுக்கும் காரணமாக இருக்கிறது. இந்த நதியில் வாழும் முதலைகள்அசுரத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இவற்றிடம் சிக்காமல் பாஸ்குவேலின் குழு வெற்றிகரமாக தமது பயணத்தை முடித்திருக்கும் போது பாஸ்குவேல் சொன்ன வார்த்தைகள் எவ்வளவு உண்மை என உணர முடிகிறது. இம்முதலைகளைப் பற்றிய காட்சிகள் சற்றே மிரட்சியூட்டுகின்றன. குழுவிலிருக்கும் எகிப்திய ஹைடிராலஜிஸ்ட் பயணம் முடிய தான் சேகரித்த நைல் நீர் அடங்கிய குடுவைகளில் ஒன்றை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட அவரின் தாத்தாவிற்கு புனித பரிசாக வழங்குவதோடு முடிகிறது இந்த படம்.

எல்லையில்லாமல் நீண்டு கிடக்கும் இந்த வாழ்க்கையின் மர்மங்களையும், அழகையும், அதிசயங்களையும், கருணையையும், ஆபத்தையும் ஒரு சேரக் கொண்டு மனிதன் தோன்றிய கண்டத்தின் மூல நரம்பாக விரிந்து கிடக்கிறது ஒரு நதி, அதன்
கரைகளிலிருந்து அதை வேடிக்கை பார்ப்பவர்களையும் அதில் இறங்கி அதன் பரவசத்தை உணர துணிவு கொண்டோரையும் வெற்றிக்கும் அது அல்லாத வேறொன்றுக்கும் சாட்சியாக்கி.

இந்த பதிவில் இடம் பெற்றிருக்கும் படங்கள் அனைத்தும் இந்த விவரணைப் படத்தின் வலைதளத்திலிருந்து பெறப்பட்டவையே.


This page is powered by Blogger. Isn't yours?